லைக்ஸ், வியூஸ் குவியும் என காத்திருந்த யூடியூபர் - கையில் விலங்கோடு வந்து குவிந்த போலீஸ் படை

Update: 2024-12-21 02:57 GMT

சமூக வலைத்தளத்தில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக, விபரீதமான மற்றும் வில்லங்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் சில இளைஞர்கள்...

அந்த வகையில் தினந்தோறும் தினுசுதினுசாக புது புது பிரச்சினைகளை இழுத்து வரும் யூடியூபர்கள் மத்தியில், பணத்தை வைத்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் யூடியூபர் ஒருவர்..

தெலங்கானாவை சேர்ந்த பானுசந்தர் என்ற யூடியூபர், தனது யூடியூப் சேனலை ப்ரமோட் செய்வதற்காக, பல வீடியோக்கள், சேலஞ்சுகள் செய்து வருவது வழக்கம்...

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோட் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று, அங்கு தனது கையில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணத்தை, வீசியுள்ளார்..

சுமார் 20 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை தேசிய நெடுஞ்சாலையில் வீசிய நபர், யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை வந்து எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் படு வைரலான நிலையில், பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இளைஞரின் பொறுப்பற்ற செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலர் வலியுறுத்த, அந்த யூடியூபர் மீது நடவடிக்கை பாய்ந்தது...

தேசிய நெடுஞ்சாலை சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 1செய்த போலீசார், யூடியூபரை கைது செய்தனர்.

ஆபத்தை உணராமல் விபரீதமான செயல்களில் ஈடுபடுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சேலஞ்சுகள் மேற்கொள்வது என முகம் சுழிக்க வைக்கும் யூடியூபர்களுக்கு பாடமாக மாறியுள்ளது இச்சம்பவம்...

Tags:    

மேலும் செய்திகள்