சாலையின் குறுக்கே திடீரென ஓடிய சிறுவன்.. பிரேக் போட்ட டிரைவர்.. அடுத்த நோடி திக்..திக்..காட்சி..
கேரளாவில் பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால் சிறுவன் நூலிழையில் உயிர்பிழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சாங்காடு பகுதியில், சிறுவன் ஒருவன் சாலையை கடந்துள்ளான். அப்போது வேகமாக சென்ற பேருந்தை ஓட்டுநர் பிரேக் பிடித்து சாதுரியமாக திருப்பியதால், சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான். திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்தும் நழுவி திசைமாறி சென்று நின்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.