படித்து கொண்டிருந்த மாணவியை கடித்த பாம்பு.. மாறி மாறி உடலில் பாய்ந்த விஷம் - பள்ளி வகுப்பறையில் அதிர்ச்சி
தமிழகத்தை ஒட்டிய கேரள மாநில எல்லை பகுதியான பாடசாலை அருகே செங்கல் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் 12 வயதான நேகா என்ற மாணவி வகுப்பறையில் சக மாணவிகளுடன் அமர்ந்திருந்தபோது, பாம்பு ஒன்று நேகாவின் காலில் கடித்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறிய நிலையில் விரைந்து சென்ற ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை, நெயாற்றங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் முட்புதர்கள் அதிக அளவில் இருப்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.