மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கடன் பெற்ற பெண்...கடன்தாரர்களுக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு

Update: 2024-09-20 05:58 GMT

மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கடன் பெற்ற பெண், கடன்தாரர்களுக்கு பயந்து எடுத்த விபரீத முடிவில், 4 வயது குழந்தையின் உயிர் பறிபோயிருக்கிறது. தொடர்ந்து 3 உயிர்கள் ஊசலாடி வரும் நிலையில், இதன் சோகப் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...கடன்தாரர்களுக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பிள்ளையார் குளத்தை சேர்ந்தவர் இந்த உச்சிமாகாளி ...

திருமணமாகி, 3 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், தன் தம்பியின் மகனையும் நான்காவதாக தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்...

இந்நிலையில், பிள்ளையார் குளத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் குடும்ப தேவைக்காக ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை கடனாக பெற்றிருக்கிறார் உச்சிமாகாளி...

வாராந்திர முறைப்படி கடன் தொகையை செலுத்தி வந்த இவர், ஒரு கட்டத்தில் குடும்ப வறுமை காரணமாக கடனை செலுத்த தவறி இருக்கிறார்...

தொடர்ந்து, மகளிர் குழு ஊழியர்கள் மீதான அச்சத்திலும் உச்சிமாகாளி இருந்த நிலையில், இந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது...

3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் தற்கொலை முயற்சி

கணவர் வேலைக்கு சென்ற சமயம் பார்த்து, அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர், தான் தத்தெடுத்த மகனை தவிர, மற்ற மூன்று குழந்தைகளுக்கும் அந்த விஷத்தை கொடுத்து கொலை செய்ய முயன்றிருக்கிறார்...

ஒரு கட்டத்தில் வாந்தி எடுத்து உச்சிமாகாளி அலறியதை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், விவரம் அறிந்து பதறிப்போய் நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்...

4 வயது குழந்தை பரிதாப மரணம் - ஊசலாடி வரும் 3 உயிர்கள்

இதில், நான்கு வயது குழந்தை பிரவீன் ராஜாவின் உயிர் பரிதாபமாக பறிபோயிருக்கிறது

தொடர்ந்து மற்ற இரு குழந்தைகளின் உயிரும், தாயின் உயிருடன் சேர்ந்து போராடி வரும் நிலையில், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்