"தண்ணீர் வடிஞ்ச பிறகு வராங்க..." - ஆத்திரத்தில் அதிகாரிகள் முன் குமுறிய மக்கள்

Update: 2024-12-09 09:55 GMT

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்தியக்குழுவினர் 2வது நாளாக ஆய்வு செய்தனர். காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களைப் பார்வையிட்டனர். மீனவ மக்கள் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவிடம் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் மனு அளித்தார். இதேபோல், எழில் நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், வாதனூர் ஏரி, கொடாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆரியப்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்ட பாலத்தையும் ஆய்வு செய்தனர். இதனிடையே, கிருஷ்ணா நகரில் ஆய்வு செய்யச் சென்ற மத்தியக்குழுவினரிடம், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது பிரச்சனைகளை எடுத்துரைத்தனர். மத்திய குழுவினர் வருகை தரும் நிலையில், தேங்கி உள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்றுவதாக குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்