பிரயாக்ராஜ் மகா கும்பம் - 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குவிந்த பக்தர்கள்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பிரயாக்ராஜ் கும்பமேளா வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் இப்போதே குவிந்து, வழிபட தொடங்கியுள்ளனர். இதன் டிரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.