குஜராத்தின் அகமதாபாத்தில், சர்வதேச பட்டம் விடும் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில், 47 நாடுகளை சேர்ந்த 143 வெளிநாட்டவர் உள்பட சுமார் 600-க்கும் மேலானோர் பங்கேற்றுள்ளனர். பட்டம் விடும் திருவிழாவை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்த நிலையில், வண்ணமயமான பட்டங்கள் வானை அலங்கரித்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அகமதாபாத் மட்டுமின்றி, சூரத், ஏக்தா நகர், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களிலும் பட்டம் விடும் திருவிழா நடைபெறவுள்ளது.