காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம்.... சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்....
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டி... முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு....
- சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக கூறி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவிப்பு... ஜனநாயகத்திற்கு விரோதமாக நடைபெறும் தேர்தலில் நம்பிக்கை இல்லாததால் புறக்கணிப்பதாக அறிவித்தது தே.மு.தி.க...
- 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காவது எடப்பாடி பழனிசாமி வருவாரா என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி... பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வரக் கூடாது என்பதற்காகவே, இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு...
- ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினர் தேர்தலில் நிற்க மறுத்ததால், தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்தோம்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விளக்கம்...
- பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்...
- தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்வு.... தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன...
- ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிப்பு.... சிறை தண்டனையோ, அபாரதமோ செலுத்த தேவையில்லை என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு....