திருப்பதியில் தமிழக, கர்நாடக பக்தர்கள் இடையே கைகலப்பு.. மண்டை உடைப்பு.. சொட்டிய ரத்தம்

Update: 2025-03-21 02:42 GMT

திருப்பதியில் அறைகள் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு காயம் அடைந்தனர். கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையானை வழிபடச் சென்றுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரும் குடும்பத்துடன் வந்துள்ளார். அறைக்கு காத்திருந்தபோது கோவிந்தராஜன் குடும்பத்தினர் கார்த்திகேயனின் மகனை இழுத்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. கோவிந்தராஜன் தரப்பினருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்