"பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை..?"பெண்கள் வைத்த கோரிக்கை | Supreme Court

Update: 2024-12-16 13:08 GMT

பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக, நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொது நல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், பொது இடங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட கோரப்பட்டது. ஒடிடி உள்ளிட்ட தளங்களில் ஆபாச படங்களுக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. கல்வி நிலையங்களில் பெண்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, கழிவறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்