தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம்.. - நீதிமன்றம் ஷாக் உத்தரவு..
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைதான தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு, இலங்கை மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 12 மீனவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தும், தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். எஞ்சிய 10 பேருக்கு வரும் 10-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.