சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பன் மகரவிளக்கு பூஜை.. அலைகடலென திரண்டு வரும் பக்தர்கள்...!
மகரவிளக்கு பூஜை நாளை நடைபெறும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் நேற்று பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட நிலையில் நாளை பம்பை கணபதி கோவிலுக்கு வந்தடையும். நாளை மாலை திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்தை அடைகிறது. தொடர்ந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நாளை மாலை ஆறரை மணிக்கு மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர். மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.