பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் என பாஜகவை ராகுல் காந்தி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜாம்செட்பூரில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மோடியின் கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டினார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைப்பதே பாஜகவின் நோக்கம் என்றும் விமர்சித்தார். 25 பெரும் தொழிலதிபர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்த மோடியால், உங்களுடைய கடனுக்கு நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களிடம் கூறினார். கோடீஸ்வரர்களுக்கு பாஜக கொடுக்கும் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைப்போம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்