கேரள காரை மடக்கிய போலீஸ்.. காரிலிருந்து காட்டுக்குள் பறந்த கவர்.. தேடி எடுத்த போலீசாருக்கு ஷாக்..

Update: 2025-01-01 03:26 GMT

கொடைக்கானலுக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாட வந்த வெளிமாநிலத்தவர் காரில் போதைப்பொருள் இருந்ததால், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்பர் லேக் வியூ அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா மாநில பதிவு எண் கொண்ட காரினை மறித்து

சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த

இளம் பெண் ஒரு பிளாஸ்டிக் கவரினை புதர் பகுதியில் தூக்கி வீசியுள்ளார். இதனை பார்த்த காவல் துறையினர் அதனை தேடி பார்த்து எடுக்கும் போது போதை பொருளான மெத்தபெட்டமைன் என தெரியவந்தது. இதையடுத்து காரில் உள்ள அனைத்து பைகளையும் சோதனை செய்தனர். அதில் போதை வஸ்த்துக்கு பயன்படுத்த கூடிய பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து

கேரளா மாநில கன்னூரை சேர்ந்த ரமீஷ்,முகமது நசில்,ஜிஷ்ணு, அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதிஷா என்ற இளம் பெண் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மெத்தபெட்டமைன் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்