தேசிய அளவிலான குதிரை ஏற்ற ஷோ ஜம்பிங் - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவன்

Update: 2025-01-11 07:43 GMT

டெல்லியில் நடந்த தேசிய அளவிலான குதிரை ஏற்ற ஷோ ஜம்பிங் போட்டியில் காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் நக்‌ஷத். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இவர், குதிரை ஏற்ற பயிற்சி பெற்று வருகிறார். பெங்களூருவில் நடந்த ஜூனியர் போட்டி, கத்தாரில் நடந்த உலக அளவிலான குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26 முதல் 29ஆம் தேதி வரை டெல்லியில் நடந்த இந்திய தேசிய அளவிலான குதிரையேற்ற ஷோ ஜம்பிங் போட்டியில் பங்கேற்றார். ஜூனியர் பிரிவில் நான்காவது இடம் பிடித்து, நான்காவது இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்