மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், 10 காவல்நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட வன்முறையால் அங்கு பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வன்முறை தொடர்பாக 90 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வன்முறை தொடர்பாக ஆளுநர் ராதாகிருஷ்ணனை, மகாவிகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.