மம்தாவின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி

Update: 2024-12-07 04:24 GMT

மம்தாவின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி

தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்தியா கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, அவர் இதைத் தெரிவித்தார். இந்தியா கூட்டணியை உருவாக்கியது தாம் தான் என்றும், தற்போது அந்த கூட்டணிக்கு தலைமையேற்று இருப்பவர்களால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியவில்லை என்றால் தாம் என்ன செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

தமக்கு வாய்க்களிக்கப்பட்டால் இந்தியா கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்று, அதனை சரியான முறையில் வழிநடத்த முடியும் என்றும் அவர் கூறினார். தன்னால் மேற்கு வங்கத்தை விட்டு வெளியே செல்ல முடியாது என்றும் அதே சமயம் மேற்கு வங்கத்தில் இருந்தபடியே அதனை நடத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் கூட்டப்படும் எந்த ஒரு கூட்டத்திலும் போராட்டத்திலும் பங்கேற்காமல் திரினமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வரும் சூழலில், அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்