மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரூ.12 லட்சம் திருட்டு..2-வது Gate-ல் நடந்தது என்ன?

Update: 2024-12-09 05:45 GMT

மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரூ.12 லட்சம் திருட்டு..2-வது Gate-ல் நடந்தது என்ன? - சிசிடிவியை அலசும் போலீசார்

மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி பதவியேற்பு விழாவில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகள்

திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியின் பதவியேற்பு விழா கடந்த 5-ம் தேதி மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். இந்நிகழ்வில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில்துறையினர், சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்ட இவ்விழாவுக்கு சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட பலரிடம் இருந்து தங்க நகைகள், பணம், அலைபேசிகள் உட்பட 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதாக போ​லீசார்​ தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் 2-வது வாயிலில் இருந்து வெளியேறிய மக்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியதாகவும், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்