கேலோ இந்தியா போட்டி முடிந்ததும் கிளம்பிய பிரச்சனை.. "எங்களுக்கு தான்".. உரிமை கொண்டாடும் இருதரப்பு
சென்னையில் சைக்கிளிங் அசோசியேஷன் அங்கீகாரம் தொடர்பாக இருதரப்பினர் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு விழா முடிந்த பின்னர் தாங்கள் தான் சைக்கிளிங் அசோசியேஷன், எங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை அளிக்க முயன்றனர். கேலோ இந்தியா போட்டியில் சைக்கிளிங் போட்டியை ஒருங்கிணைக்கும் பணி, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் எனும் பெயரில் இரு அமைப்புகள் பதிவு செய்யப்பட்டு இயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை பொறுப்புக்கு வர ஒருதரப்பினர் முயற்சிப்பதாக மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.