சீட்டில் சும்மா இருந்த இளைஞர்...திடீரென வந்து மோதிய பஸ்.. கண் நம்ப மறுக்கும் காட்சிகள்
கேரள மாநிலம் இடுக்கி அருகே காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் மீது தனியார் பேருந்தின் முன்பகுதி மோதிய சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. கட்டப்பனை பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நல்வாய்ப்பாக இளைஞர் உயிர் தப்பிய நிலையில், இது குறித்து கேரள போக்குவரத்து கழகம் விசாரணை நடத்தியது. விபத்திற்கு காரணமாக தனியார் பேருந்து ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.