தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி.. தரையில் கால் வைத்தும் பரபரப்பான சாலை..

Update: 2024-12-04 12:26 GMT
  • உத்தரப்பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காசிப்பூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் காந்தியின் பயணத்தை தடுக்கும் விதமாக காவல்துறையினர் ஏராளமான தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலைகளில் கூடியதாலும் டெல்லி -மீரட் எக்ஸ்பிரஸ் வழி சாலையில் ஒரு புறம் மட்டுமே வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் ஆத்திரமடைந்த பயணிகள், ராகுல் காந்தி ஒழிக என முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்