- கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒசூர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றபடும் நீரில், குவியல் குவியிலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்கின்றன. பிரதான இடது புற கால்வாயில் பாசனத்திற்காக
- திறந்துவிடப்படும் நீரிலும் குவியல் குவியலாக நுரைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றில் பனிக்கட்டிகள் போல மிதந்து செல்லும் ரசாயன நுரைகள், காற்றின் மூலம் இதர பகுதிகளுக்கும் பரவி, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.