மசூதி இருந்த இடத்தில் இந்துக்கோவில்..?வெடித்த வன்முறை..பார்வையிட சென்ற ராகுலுக்கு காத்திருந்த ஷாக்
- மசூதி இருந்த இடத்தில் இந்துக்கோவில்..?வெடித்த வன்முறை..பார்வையிட சென்ற ராகுலுக்கு காத்திருந்த ஷாக்
- உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டம், சந்தோசியில் 16ஆம் ஆண்டு நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஜாமா மசூதி இடிக்கப்பட்ட கோவில் மீது கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டது. ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறையினால் 5 பேர்
- பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வன்முறையில் தொடர்புடையதாக கூறப்படும் மொராதாபத் மண்டல ஆணையர், சம்பல் மாவட்ட
- ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சந்தோசி கோட்டாட்சியர், வட்டார அலுவலர் உள்ளிட்டோரை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை
- அமைத்து உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்தப் பொதுநல மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பன்சாலி, நீதிபதி விகாஸ் புத்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. குற்றங்கள் சார்ந்த பொதுநல வழக்கை விசாரிக்க இந்த அமர்வுக்கு வரையறை இல்லை எனக் குறிப்பிட்டு, உரிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது.