சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பிற்காக
கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும்
சென்னையில் இருந்து கொச்சிக்கு 8 புறப்பாடு
விமானங்கள், கொச்சியில் இருந்து சென்னைக்கு
8 வருகை விமானங்கள் என 16 விமான சேவைகளாக
அதிகரித்துள்ளன. இது மட்டும் இன்றி சென்னை,
பெங்களூர், கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் இயக்கப்படுகின்றன. ஐயப்ப பக்தர்கள், இருமுடி பைகளில், தேங்காய் எடுத்துச் செல்வதற்கு இந்திய விமான நிலைய ஆணையம், தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.