பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஹைதராபாத்தில் சாலையோரத்தில் பணத்தை வீசி, இதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட யூடியூபர், கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை வைத்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.