அரியானா மாநிலம் பிவானி அருகே கண்டித்த ஆசிரியரை பழிவாங்க, நாற்காலிக்கு அடியில் வெடிபொருள் வைத்து வெடிக்கச் செய்த மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர்தப்பினார். யூடியூப்பை பார்த்து நாற்காலிக்கு அடியில் வெடிபொருள் வைத்து, அதை ரிமோட் மூலம் வெடிக்க வைத்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் 13 மாணவர்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து அரியானா மாநில கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.