தன்பால் ஜோடிகளுக்கு குழந்தை தத்தெடுக்கும் உரிமை - நீதிபதிகள் உத்தரவு | LGBTQ |Supreme Court Of India

Update: 2025-01-08 03:06 GMT

தன்பால் ஜோடிகளுக்கு குழந்தையை தத்தெடுக்கும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தன்பால் திருமணத்துக்கு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தன்பால் உறவில் உள்ளவர்கள் தங்களது அன்பை கொண்டாட எவ்வித தடையும் இல்லை என்றும், ஆனால், அதற்கான அங்கீகாரத்தை கோர முடியாது என்றும் தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்வதை அடிப்படை உரிமையாக கருத முடியாது என்றும், தன்பால் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க சிறப்பு திருமண சட்ட பிரிவுகளை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தன்பால் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து முடிவு செய்வது நாடாளுமன்றத்தின் பணி என்று தெரிவித்த நீதிபதிகள், குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள தன்பால் ஜோடிகளுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு, வரும் வியாழக்கிழமை விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்