பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதலைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
அமிர்தசரஸ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பொற்கோவில் நுழைவு வாயிலிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது... சிரோன்மணி அகாலி தளம் ஆட்சிக்காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருக்களால் தண்டனை வழங்கப்பட்டது... இந்நிலையில், சுக்பிர் சிங் பாதல் தமக்கு வழங்கப்பட்ட மத தண்டனையின் ஒரு அங்கமாக கோவில் வளாகப் பகுதியில் தூய்மை செய்வது, காலணிகளை துடைப்பது, தண்ணீர் வழங்குவது போன்ற மதம் சார்ந்த சேவையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென பாதலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அருகில் இருந்த நபர்கள் அவரது கையை தட்டி விட்டதோடு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். இதனால் துப்பாக்கி குண்டு நல்வாய்ப்பாக பாதல் மீது படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.