நடுரோட்டில் zomato ஊழியர் கிறிஸ்துமஸ் உடையை கழட்டி மிரட்டிய இந்து அமைப்பினர்.. - அதிர்ச்சி வீடியோ

Update: 2024-12-26 14:27 GMT

கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து உணவு டெலிவரி செய்த zomato ஊழியரின் உடையை களைய வைத்த ஹிந்து அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை மகிழ்விக்க zomato நிறுவன ஊழியர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து உணவு டெலிவிரி செய்தார். இதை கண்ட ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பினர் ஊழியர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்ததிற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும், இதே போன்று, ராமர் உடையணிந்து உணவு டெலிவிரி செய்வீர்களா என கேள்வி எழுப்பினர். உடனடியாக கிருஸ்த்துமஸ் தாத்தா உடையை கழற்றும்படி வற்புறுத்தி, ஆடையை களைய வைத்தனர். இந்த வீடியோ காட்சியை கண்ட வலைதள வாசிகள், ஹிந்து அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்