``அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்யவில்லை என்றால்..'' - பிரதமர் மோடிக்கு கார்கே கொடுத்த எச்சரிக்கை

Update: 2024-12-19 02:15 GMT

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார். வணங்கப்பட வேண்டிய தலித் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். அமித்ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி 6, 7 பதிவுகளை போட்டுள்ளார், அதற்கான அவசியம் என்ன? என கேள்வியை எழுப்பிய கார்கே, அம்பேத்கரை அவமதிப்பவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள், ஒருவரின் பாவங்களை மற்றொருவர் ஆதரிக்கிறார் என குற்றம் சாட்டினார். எங்களுடைய கோரிக்கை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறிய கார்கே, அம்பேத்கர் மீது மோடிக்கு நம்பிக்கையிருந்தால் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார். அப்படி செய்தால்தான் மக்கள் அமைதியாக இருப்பார்கள், இல்லையெனில் மக்கள் போராட்டம் நடத்துவார்கள். அம்பேத்கருக்காக மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளனர் என கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்