இந்தியாவின் வளர்ச்சி தடம் புரளுவதை எதிர்நோக்கி இருக்கும் அந்நிய சக்திகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஆதரித்து ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே பி நட்டா கடிதம் எழுதியுள்ளார்... மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கார்கே குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக நட்டா கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்ததாக குற்றம் சாட்டிய அவர், வெளிநாட்டுப் போராளிகள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குக் குடிபெயர்ந்ததை காங்கிர அரசு சட்டப்பூர்வமாக்கியது மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதையும் நீங்கள் மறந்துவிட்டீர்கள் என சாடியுள்ளார்.