"புதுச்சேரி மக்களுக்கு நிரந்தர சாதி சான்றிதழ்" - ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி மக்களுக்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளியிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.