#Breaking|| கூண்டோடு சிக்கும் "கைலாசா" நித்தியானந்தா.. இன்டர்போல் போலீசால் திடீர் திருப்பம்

Update: 2023-09-01 09:27 GMT

பிரபல சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு ராம் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் ஆஜராகாததால் நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்றதாக தகவல் வெளியானதை தொடர்ந்து நித்தியானந்தா பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அறிவிப்பு விடப்பட்டது. இதன் பொருள் தேடப்படும் குற்றவாளி என்பது. மேலும் இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் தற்போது வரை நித்யானந்தாவை பிடிக்க முடியவில்லை. இதனிடையே அவ்வபோது கர்நாடகாவில் இவ்வழக்கை விசாரிக்கும் சிஐடி போலீசாரிடம், இன்டர் போல் போலீசார் நித்யானந்தா குறித்த தேவையான விவரங்களை மற்றும் ஆவணங்களை கர்நாடக கேட்டு பெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கர்நாடக சி.ஐ.டி போலீசாரிடம் இன்டர்போல் போலீசார் சில விவரங்களை கேட்டு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நித்யானந்தா விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்