தலையில் சிக்கிய பாத்திரம்.. கதறிய குழந்தை.. பல மணி நேரமாக போராடிய மீட்பு வீரர்கள்

Update: 2024-12-18 05:30 GMT

தலையில் சிக்கிய பாத்திரம்.. கதறிய குழந்தை.. பல மணி நேரமாக போராடிய மீட்பு வீரர்கள்

கேரள மாநிலத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் அகற்றியுள்ளனர். வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில், எதிர்பாராதவிதமாக பாத்திரம் ஒன்று சிக்கியது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் எவ்வளவு முயன்றும், பாத்திரத்தை அகற்ற முடியவில்லை, இதனைதொடர்ந்து தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாத்திரத்தை வெட்டி, குழந்தையை பத்திரமாக காப்பாற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்