கைக்குழந்தை பலாத்காரம்.. அது கிடந்த கோலத்த கேட்டா இதயமே வெடிக்கும்.. இவனெல்லாம் மிருகத்துல கூட சேர்க்க முடியாது
பெற்றோருடன் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த 7 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரவலத்தின் உச்சமாய் நாட்டை மீண்டும் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. எங்கே நடந்தது இந்த துயரம்? பார்க்கலாம் விரிவாக..
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியின் தாக்கம் இன்னும் தணியாத கொல்கத்தாவில்தான் இந்த அடுத்த கொடூரம்...
இருக்க வீடில்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி தங்களின் 7 மாத கைக்குழந்தையுடன் பிளாட்பாரத்தில் தங்கியிருந்த தம்பதிக்கு நேர்ந்திருக்கும் கோரம் மனதை பதற வைத்திருக்கிறது..
பிளாட் பாரத்தில் தூங்கி கொண்டிருந்த தம்பதியின் 7 மாத கைக்குழந்தையான பச்சிளம் பிஞ்சை 35 வயது இளைஞர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்...
காலையில் எழுந்தவுடன் குழந்தையை காணவில்லை என தம்பதி ஒரு பக்கம் தேட... சில நிமிடங்களிலே அருகிலுள்ள பகுதியில் குழந்தை ஒன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக காவல்நிலையத்திற்கு கிடைத்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்த பெண் மருத்துவர் மருத்துவமனைக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையிலேயே குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.....
நாட்டை ஸ்தம்பிக்கச் செய்து, கொல்கத்தாவை நிலைகுலைய செய்திருந்த பெண் மருத்துவர் கொலையால்.. பரபரப்பாக இருக்கும் சூழலில், பெற்றோருடன் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த 7 மாத கைக்குழந்தை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது...
இந்த பேரவலச் சம்பவத்தில், குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், தொடர்ந்து இதன் பின்னணி குறித்தான விசாரணையும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்..