அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல திட்டம்? - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-12-18 02:16 GMT

அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல தெலங்கானா போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 படத்தின் பிரிமியர் காட்சியின் போது, படம் பார்க்க சென்ற ரேவதி என்ற பெண்மணி நடிகர் அல்லு அர்ஜுனின் திடீர் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகனும் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வாங்கிய பிறகு சனிக்கிழமை காலை அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்

ஜாமீன் ஆவணம் வெள்ளிக்கிழமை இரவே கிடைத்துவிட்டதாகவும், சிறை நிர்வாகம் திட்டமிட்டே அல்லு அர்ஜுனை இரவு முழுவதும் சிறையில் வைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல தெலங்கானா போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்