"கேப்சூல்" முறையில் குறுவை சாகுபடி : அசத்தும் பட்டதாரி விவசாயி

மயிலாடுதுறை அருகே பாரம்பரிய நெல் விவசாயி ஒருவர் "கேப்சூல்" முறையில் குறுவை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

Update: 2022-06-05 10:21 GMT

மங்கைநல்லூரைச் சேர்ந்த ராஜ சேகர் என்பவர் அடிப்படையில் பல பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை முடித்திருந்தாலும், விவசாயத்தின் மீது கொண்ட காதலால் தனது தொழில் இனி வேளாண்மை தான் என்று முடிவு செய்து கடந்த 9 ஆண்டுகளாக விசவசாயம் செய்து வருகிறார். அதிலும் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் இவர், தனது வயலில் கருப்புக்கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். தொடர்ந்து இந்த வருடம் தனது 1 ஏக்கர் நிலத்தில் அறுபதாம் குறுவை நெல் ரகத்தை கேப்சூல் முறையில் நடவு செய்துள்ளார். உரம் மற்றும் 3 நெல் விதைகளை 1 கேப்சுலில் அடைத்து விதைப்பதன் மூலம் அதிக விளைச்சல் வருவதுடன், விதைக்கத் தேவைப்படும் நெல் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக சாகுபடிக்கு 110 நாட்கள் தேவைப்படும் நிலையில் இந்த முறையில் நடவு செய்யும்போது 90 நாட்கள் மட்டுமே தேவைப்படும் என்கிறார் விவசாயி ராஜசேகர்.

Tags:    

மேலும் செய்திகள்