4 மாதமாக நண்பனை காணாமல் தேடிய பெற்றோர்.. - ஆறுதல் சொல்லிய நபரே.. கருவறுத்த பயங்கரம்..
விழுப்புரம் அருகே 8 லட்ச ரூபாய்க்காக நண்பனை கொலை செய்து புதைத்து விட்டு, 4 மாதங்களாக நாடகமாடி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் 27 வயது மகன் முத்துக்குமரன், விவசாயம் செய்து வந்தார். இவருடைய நெருங்கிய நண்பராக இதே ஊரைச் சார்ந்த தமிழரசன் என்பவர் உள்ளார். கடந்த செப்டம்பர் 19-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற முத்துக்குமரன் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், அவர்கள் பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். அதன் பிறகு முத்துக்குமரன் தந்தை முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் முத்துக்குமாருக்கும் அவரது நண்பர் தமிழரசனுக்கும்,
8 லட்ச ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், முத்துக்குமரனை தமிழரசன் தனியாக அழைத்துச்சென்று கொலை செய்து புதைத்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, உடல் புதைக்கப்பட்ட இடத்தில்,
போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஜேசிபி உதவியுடன் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.