விடுதியில் புகுந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசி இளைஞர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..

Update: 2025-01-01 03:30 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மதுபோதையில் அரசு மாணவி விடுதிக்குள் புகுந்து மாணவிகளிடம் தகராறு செய்த 2 சிறார்களை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலையில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக சில மாணவிகள் ஊருக்குச் சென்று விட்ட நிலையில்

விடுதியில் தற்போது 35 மாணவிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் விடுதிக்குள் அத்து மீறி நுழைந்து, மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், கூச்சலிட்டதால், அந்த 2பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த 2 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்