ரோலர் கோஸ்டராக மாறிய பேருந்து.. முன் கம்பியை கட்டியாக பிடித்த பாசஞ்சர்.. சாஞ்சா அவ்ளோ தான்

Update: 2024-10-06 04:46 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உடைந்த இருக்கைகளுடன் இயக்கப்படும் அரசு பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சிதம்பரத்தில் இருந்து முகையூர், லால்பேட்டை வழியாக காட்டுமன்னார்கோவிலுக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்றில் இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. பயணிகள் சீட்டில் அமர்ந்திருந்தாலும், சாய்ந்து அமர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி செல்கின்றனர். மேலும் பேருந்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுவதால், அச்சத்துடன் பயணித்து வருவதாக கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்