கம்பீரமாக வந்த வேலுநாச்சியாரின் வாரிசு-தன் கையால் 5,000 பேருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த காட்சி

Update: 2024-12-25 09:20 GMT

வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் வாரிசுதாரரான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்... தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பங்கேற்ற 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுடன் 5000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்