மகனை அடித்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை..அவரையும் அடித்து அசிங்கப்படுத்திய குடும்பம்
காட்டுமன்னார் கோவில் அருகே வடக்கு கொளக்குடி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாகரன். இவரது மகன் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை தனது செல்போனில் வைத்துள்ளார். இதனை அறிந்த பெண் வீட்டார் கார்த்திக்கை அடித்துள்ளனர். மகனை அடித்தது குறித்து கேட்கப்போன கருணாகரனையும் பெண் வீட்டார் தாக்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த கருணாகரன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாகரனின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.