2 வாரத்தில் மாநாடு.. இந்த நேரத்தில் திடீர் சோதனை.. எதிர்பாராமல் வந்தாலும் எதிர்த்து போராடும் விஜய்
#vijay #tvkmaanadu #tvkvijay
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டை எதிர்நோக்கியுள்ள சூழலில், மாநாட்டிற்கான பணிகள் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டே வருகின்றன..
தொடக்கத்தில் வாழ்த்து செய்தியை மட்டுமே பகிர்ந்து வந்த விஜய், கட்சிக் கொடி அறிமுகத்திற்கு பின்னர் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து கருத்து தெரிவித்து வருவது அரசியல் களத்தில் தனி கவனம் பெறுகிறது..
இந்நிலையில் செப்டம்பர் மாதமே மாநாட்டை நடத்த வேண்டும் என உறுதியாக இருந்த தமிழக வெற்றிக் கழகம், அதற்கான பணிகளை மேற்கொண்ட சூழலில், போலீசார் அனுமதி பெற்றும் குறித்த தேதியில் மாநாட்டை நடத்த முடியாத சூழலுக்கு ஆளானது..
இதனால் கட்சித்தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்திற்குள்ளாவது முதல் மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என நிர்பந்தத்தில் இருந்தது தமிழக வெற்றிக் கழகம்..
ஒருவழியாக அக்டோபர் 27ம் தேதி மாநாடு நடத்தப்படும் என கட்சித்தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக, போலீசாரிடம் இருந்தும் அனுமதி கிடைக்க முழு வீச்சில் மாநாட்டு பணிகளில் இறங்கினர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்...
விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மாநாடு நடத்தவுள்ள நிலையில், அங்கு மேடை அமைப்பது, பாதுகாப்பு உறுதி செய்வது என பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிரமாண்ட் மேடை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் சூழலில், மாநாட்டு திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெளிநாட்டை சேர்ந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக்கான பணி விறுவிறுப்பாக நடந்து வந்த சூழலில், விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள ஓட்டல் அறைகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திடலை சுற்றி கொடி கம்பங்கள் நடும் பணி தொடங்கியுள்ள சூழலில், திடலின் முகப்பில் நூறு அடி உயரம் கொண்ட நிரந்தர கொடிக்கம்பம் நிறுவ கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் தலைமையில் பூஜை நடைபெற்றது.
விழுப்புரம் நகரை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் மணி என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில், 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து11×11 என்ற அளவில் இந்த நிரந்தர கொடிக்கம்பம் 100 அடி உயரத்தில் முதல் மாநாடு நினைவாக நிறுவப்பட உள்ளது.
புயல் அடித்தாலும் கொடிக்கம்பத்திற்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் வின்ட் விலாஸிட்டிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கொடிக்கம்பம், 8 அடி ஆழத்தில் நிறுவப்பட உள்ளது.
அதே வேளையில், மழைக் காரணமாக மாநாடு பணிகள் தாமதமாகியுள்ளது..சுறுசுறுப்புடன் பணிகள் தொடங்கிய நிலையில், மழையால் பந்தல் அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் குறித்த தேதியில் மாநாடு நடத்தியே தீர வேண்டும் என உறுதியாக உள்ள கட்சித்தலைமை...மழையுடன் போராட வேண்டிய நிலையே நிலவும் என தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..