மீண்டும் இணையும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி.. வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு
இயக்குனர் வெற்றிமாறனின் 9-வது படத்தில், தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை இரண்டாம் பாகத்தை தொடர்ந்து புதிய படமொன்றை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இதனை விடுதலை படத்தை தயாரித்த ஆர்எஸ் இன்போடெயின்ட்மென்ட் நிறுவனமே தயாரிக்க உள்ள நிலையில், அதில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி 5-வது முறையாக இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.