ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. கூலி படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ஜெயிலர் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தின் புரோமோ காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில், நாளை மாலை 6 மணிக்கு, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், ஜெயிலர் 2 புரோமோ வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.