வருமான வரித்துறை மையத்தில் வைகைப் புயல் - தனது அசுர வளர்ச்சி பற்றி பரபரப்பு பேட்டி
கன்னியாகுமரி மாவட்ட வருமான வரித்துறையின் சார்பாக நாகர்கோவிலில் அதன் சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, நாட்டில் பொது நிகழ்வு, அரசியல் காமெடி என எல்லா நிகழ்வுகளுக்கும் என் படத்தையே காட்சிக்காக பயன்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். என்னுடைய வளர்ச்சிக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் பங்கு மிக முக்கியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.