மெகா ஸ்டாருக்கு மகா கவுரவம் - சிரஞ்சீவியை கொண்டாடிய பிரிட்டன் நாடாளுமன்றம்
சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, நடிகர் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து சென்ற அவருக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதே போல் "பிரிட்ஜ் இந்தியா" அமைப்பு சார்பில், பொதுசேவையில் சிறந்து விளங்குவதற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதும் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.