தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்...

Update: 2024-08-16 16:13 GMT

70வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்ட நிலையில், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 1 விருதுகளைக் குவித்துள்ளது...

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் துவங்கி பலரும் படமாக்க முயன்ற கல்கியின் பொன்னியின் செல்வன் கதை பலருக்கும் சவாலாக விளங்க...அதை திரைப்படமாக்கி சாதித்தவர் இயக்குநர் மணிரத்தினம்...


கல்கியின் வார்த்தைகளே படம் பார்க்கும் உணர்வைத் தரும்...அதை மணிரத்னம் ஸ்டைலில் படத்தில் காண்கையில் கூடுதல் அழகு...


பொன்னிநதி பாக்கணுமே...சோழா சோழா...ராட்சச மாமனே...என பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன் பாணியில் பின்னி பெடலெடுத்திருப்பார் ஏ.ரகுமான்...


அந்த வகையில் சிறந்த தமிழ்ப்படமாக பொன்னியின் செல்வன் 1 தேர்வானதில் ஆச்சரியப்படுவதற்கில்லை...

பின்னணி இசைக்கான தேசிய விருதும் நம் ரகுமான் கரங்களைத் தேடி வந்துள்ளது...

சிறந்த ஒலி வடிவமைப்பு பொன்னியின் செல்வனுக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும்...சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவி வர்மனுக்கும் கிடைத்துள்ளது...

இப்படி பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 4 விருதுகளை வென்று மாஸ் காட்டியுள்ளார் மணிரத்னம்...

காதல்...காமெடி...என மிகச்சிறந்த கலாட்டா படமாக வெளிவந்த தனுஷின் திருச்சிற்றம்பலத்தில் நடித்து...தாய்க்கிழவி என செல்லமாக அனைவராலும் தோழமையோடு அழைக்கப்பட்ட நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்று அசத்தியுள்ளார்...

திருச்சிற்றம்பலம் படம் வந்தபோதே கேர்ள் ஃப்ரண்ட் ஷோபனாவைப் போலத்தான் இருக்க வேண்டும் என இளசுகள் சிலாகிக்கும் அளவு...அழகான எதார்த்தமான துள்ளலான துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நித்யா மேனன்...


மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலுக்கான நடனம் அப்போதே சமூக வலைதளங்களைக் கலக்கியது... இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டிலும் கூட அப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர் ரசிகர்கள்...அப்பாடலின் நடன இயக்குநர்களான ஜானிக்கும், சதீஷ் கிருஷ்ணனுக்கும் தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளனர்,...


எதிர்பார்த்த அளவுக்கு தமிழ்ப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பதையும் மறுக்க முடியாது... Non feature பிரிவில் எந்த தமிழ்ப்படத்துக்கும் விருது கிடைக்கவில்லை என்பதும் கவலைக்குரிய விஷயமே...

Tags:    

மேலும் செய்திகள்