சல்மான் கானை தொடர்ந்து இந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-11-08 02:20 GMT

மும்பை போலீசுக்கு வந்த மிரட்டல் காலில், 50 லட்சம் ரூபாயை ஷாருக்கானிடம் இருந்து பெற்று தர வேண்டும், இல்லையென்றால் அவரை கொல்வோம் என மர்மநபர் எச்சரித்துள்ளார். தொலைபேசி எண் விபரங்களை ஆய்வு செய்த போலீசார், சண்டிகாரை சேர்ந்த பைசான் கானை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், பைசான் கான் தனது தொலைபேசி நவம்பர் 2 ஆம் தேதியே தொலைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். கொலை மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஷாருக்கானுக்கு ஏற்கனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்