'விடாமுயற்சி' படப்பிடிப்பு நிறைவு நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மகிழ் திருமேனி

Update: 2024-12-22 23:15 GMT

அஜித்குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ஒருபக்கம் டப்பிங் பணிகள் நடைபெற மறுபக்கம், தாய்லாந்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த சூழலில், படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததாகவும், தங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருந்ததோடு, தொடர்ந்து ஊக்கமளித்ததாக அஜித்குமாருக்கு இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்